“என்னால படிப்பு சுமை தாங்க முடியல…” 15-வது மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி… கதறிய பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல ‘கௌர் சித்தார்தம் சொசைட்டி’ குடியிருப்பில் 15-வது மாடியில் இருந்து குதித்து 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

15-வது மாடியில் இருந்து திடீரெனக் கீழே விழுந்த அந்தச் சிறுமி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காசியாபாத் போலிஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் அறையைச் சோதனையிட்டபோது அங்கே உருக்கமான தற்கொலை கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

   

அந்தக் கடிதத்தில், “படிப்பின் கடுமையான சுமையையும் அதிகப்படியான அழுத்தத்தையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று அந்தச் சிறுமி மனவேதனையுடன் எழுதி வைத்துள்ளதாகப் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி ஒருவர் படிப்புச் சுமையால் 15-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், பெற்றோர்கள் மற்றும் கல்வி முறை மீது மீண்டும் பெரிய கேள்விகளையும் அதிர்வலைகளையும் எழுப்பியுள்ளது.