அவமானம் என நினைத்து உயிரை விட்ட மாணவி…! நிதி நிறுவன ஊழியரின் செயலால் நேர்ந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

By Devi Ramu on பங்குனி 23, 2026

Spread the love

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, 14 வயது பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (32) என்ற திருமணமான நபர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த இளைஞரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், நடந்த சம்பவத்தால் மனமுடைந்த மாணவி, அவமானமாக கருதி தனது உயிரை மாய்த்துக்கொண்ட துயரம் நிகழ்ந்துள்ளது. தனியார் நிதி நிறுவன ஊழியரான சதீஷைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய இக்கட்டான சூழலில் குழந்தைகள் விபரீத முடிவெடுக்காமல் இருக்க, பெற்றோர் தகுந்த பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு வழங்க வேண்டும். தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்டவர் பலியாகத் தேவையில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும். சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ‘போக்சோ’ போன்ற மிக வலுவான சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. ஆபத்தான நேரங்களில் 1098 என்ற உதவி எண்ணையோ அல்லது 14417 என்ற மனநல ஆலோசனை எண்ணையோ அழைத்து உரியப் பாதுகாப்பைப் பெறலாம்.