மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதாரா மாவட்டத்தில் உள்ள புனே மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரட் அருகே வாதார் கிராம பகுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலரும் காயமடைந்தனர்.
கல்வி சுற்றுலாவிற்கு வந்திருந்த 45 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்தனர். இந்த விபத்துக்கு பிறகு உள்ளூர் மக்கள் நெடுஞ்சாலை கண்காணிப்பு குழு மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
पुणे-बेंगलुरु नेशनल हाईवे पर सातारा जिले के कराड के पास वाठार गाँव की सीमा में एक बड़ा सड़क हादसा हुआ.छात्रों से भरी बस हाईवे से करीब 20 फीट नीचे गिर गई. बस में करीब 40-45 छात्र और शिक्षक सवार थे. घायलों को तुरंत कृष्ण अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया है.#Pune… pic.twitter.com/cpDTgw7gAG
— NDTV India (@ndtvindia) December 2, 2025
