“ஓடும் ஆட்டோவில் கதறிய மாணவி”…. பள்ளிக்கு செல்லும் வழியில் நடந்த கொடூரம்…. ஆட்டோ ஓட்டுனரின் வெறிச்செயல்….!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் பள்ளிக்குச் சென்ற 12 வயது சிறுமியிடம் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, வழக்கம்போல பள்ளிக்குச் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ஓட்டுநர், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே, பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் ஓட்டுநர் சிறுமியை ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றார்.

சாலையில் விழுந்த சிறுமியை அங்கிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம் குற்றவாளி மணலி பகுதியைச் சேர்ந்த 61 வயதான சண்முகம் என்பது கண்டறியப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்கச் சென்றபோது, காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்று பாறைகளில் விழுந்ததில் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தற்போது சண்முகத்தைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பள்ளி செல்லும் சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago