FLASH NEWS: இனிமேல் ஏமாத்த முடியாது… தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விவரங்களை பள்ளி தகவல் பலகையில் (Notice Board) கட்டாயம் ஒட்ட வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவ்வாறு கட்டண விவரங்கள் ஒட்டப்பட்டுள்ள தகவல் பலகையை புகைப்படம் எடுத்து, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு (DEO) பள்ளிகள் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களிலேயே வகுப்புவாரியான கட்டண விவரங்களை தெளிவாக அச்சடித்து வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளின் இத்தகைய கட்டணக் கொள்ளையைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது பெரும் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.