தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கூடுதலாக 3 நாள்கள் தாமதமாக, ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மாநில தகவல் ஆணையம் பெற்றோர்களுக்குச் சாதகமான ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் தங்களின் கட்டண விவரங்களை, பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது பள்ளி வளாகத்தில் உள்ள விளம்பரப் பலகையிலோ பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே கல்விக்கட்டணம் குறித்த துல்லியமான விவரங்களைப் பெற்றோர் எளிதாக அறிந்துகொள்ளவும், கட்டணக் கொள்ளையைத் தடுத்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை பெரிதும் உதவும் எனப் பாராட்டப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…