தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் தனியார் பள்ளியில் வினுலோகேஸ்வரன் என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. அப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு வினுலோகேஸ்வரன் பாலியல் தொல்லைத் தந்துள்ளார். இதைக்குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடூரத்தை கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் வினுலோகேஸ்வரனை போக்சோ
வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியிலும் பள்ளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
