பெங்களூரில் புனித மேரிஸ் பொதுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிளாஸ்டிக் பிவிசி குழாயால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தின் போது ஒரு ஆசிரியை சிறுவனை பிடித்துக் கொண்டதாகவும், பள்ளி உரிமையாளர் விஜயகுமார் அங்கே இருந்தும் தாக்குதலை தடுக்கவில்லை என்றும் சிறுவனின் தாய் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் சிறுவன் பலத்த காயமடைந்துள்ளான். இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது பள்ளி நிர்வாகம் விரட்டியதாகவும் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு பள்ளியிலிருந்து வெளியேறுமாறு கூறியதாகவும் தாய் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.
தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டுமென்று கேட்டுள்ள அவர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசீர் புகார் அளித்துள்ளார். தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மருத்துவ பரிசோதனை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அதேசமயம் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவது வருத்தம் அளிக்கிறது.
