ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பள்ளி மாணவன் கொடுத்த காதல் தொல்லையால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோகுல் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்பவரின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். அதே வகுப்பில் படித்து வந்த தினேஷ்என்ற மாணவன், மாணவியைத் தொடர்ந்து நோட்டமிட்டு வந்ததோடு, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவி செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்தத் தொல்லை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் முறையிட, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் அந்த மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரைப் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது. இருப்பினும், தண்டனைக்குப் பிறகும் அந்த மாணவன் திருந்தவில்லை. மாணவி பள்ளிக்குச் செல்லும் போதும், தெருவில் நடமாடும் போதும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து, “நீ என்னை காதலித்தே ஆக வேண்டும்” என மிரட்டி அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ச்சியான இந்த மிரட்டல்களாலும், மன உளைச்சலாலும் கடும் அச்சமடைந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகளின் உயிரிழப்பிற்கு அந்த மாணவனின் டார்ச்சரே காரணம் எனக்கூறி அவரது தாயாரும் உறவினர்களும் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.
சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், மாணவியின் மரணத்திற்கு காரணமான மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் சமாதானமடைந்து உடலைப் பெற்றுக்கொண்டனர். ஒரு மாணவனின் முதிர்ச்சியற்ற செயலால் வளர்ந்து வரும் ஒரு மாணவியின் உயிர் பறிபோனது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே ஏம்பலத்தில் அமைந்துள்ள தியான பீடத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, இதில் பங்கேற்க 'கைலாசா' நித்யானந்தா…
பெங்களூருவின் அகாரா ஏரிப் பகுதியில் நடந்து மற்றும் ஓடிக்கொண்டிருந்த பெண்களின் அனுமதியின்றி அவர்களின் விடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்ததாக ஒரு…
கணவன்-மனைவிக்கு இடையே பரஸ்பர சந்தேகத்தின் காரணமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்தன. இந்தத்…
அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக நசுங்கி…
அசாமின் தேமாஜி மாவட்டம் ஜோனை நகரில் உள்ள தெலாம் பஜாரில், பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு…
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…