தெரு நாய்க்கடி… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்து அவசர உத்தரவு…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

தமிழகத்தில் தெரு நாய் கடி தொடர்பாக பள்ளிகளுக்கு அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நாய் கடியால் பாதிக்கப்பட்டால் தயக்கமின்றி ஆசிரியர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு உரிய ஆலோசனை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தெரு நாய்களுக்கு உணவு தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியினை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ, அவற்றிற்கு உணவளிப்பதோ தவிர்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.