விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். அதன்படி நாளை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அன்றைய நாளில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படாது. அதேசமயம் கனமழை காரணமாக இன்று சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
