கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ஐந்தாவது மாவட்டமாக திருவாரூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே தென்காசி மற்றும் நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
