திமுகவின் கோட்டை.. சென்னையின் ‘இதயம்…! துறைமுகத்தில் நங்கூரமிடுவது திமுகவா..? அல்லது புது ரத்தமா..? அனல் பறக்கும் அரசியல்…!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

தமிழக அரசியலில் ‘சென்னையின் இதயம்’ என்று வர்ணிக்கப்படும் துறைமுகம் தொகுதி, பல தசாப்தங்களாக திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முதல் இன்றைய அமைச்சர் பி.கே. சேகர்பாபு வரை, திமுகவின் முக்கியத் தூண்கள் இங்கு வெற்றிக்கொடியை நாட்டியுள்ளனர். 1977-ல் இருந்து ஒருமுறை தவிர (1991), மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவே இங்கு வெற்றி பெற்றுள்ளதால், இது திமுகவின் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக மாற்றப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இங்கு அதிகளவில் இருப்பதால், அவர்கள் பெரும்பாலும் திமுகவின் பக்கமே நின்று அதன் வெற்றியை உறுதி செய்து வந்துள்ளனர்.

இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த ‘திமுக கோட்டையில்’ நங்கூரமிட அதிமுக மற்றும் புதிய வரவான தவெக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் துடிக்கும் நிலையில், சென்னை மாநகர வாக்குகளைக் குறிவைக்கும் விஜய்யின் தவெக, இத்தொகுதியில் புதுப்பொலிவுடன் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் வணிகர்களின் அதிருப்தியை அறுவடை செய்ய எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதனால், திமுக தனது பாரம்பரியக் கோட்டையைத் தக்கவைக்குமா அல்லது மாற்றத்தின் காற்றால் புதிய சக்தி அங்கு நங்கூரமிடுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.