உத்தரகாண்ட் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டு, திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த புதிய வீடியோக்களும், துயரங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.அந்தவகையில் தற்போது ஒரு இதயத்தை உடைக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது இயற்கை மனிதர்களை மட்டுமல்ல, வனவிலங்குகளையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துபோன சிறுத்தை ஒன்று வைரலான வீடியோவில் காணப்பட்டது.
https://twitter.com/i/status/1962556800299122740
இந்த காணொளி @paragenetics என்ற X ஹேண்டில் பகிரப்பட்டது. காணொளியின் தலைப்பு, “மனதை உடைக்கும் இழப்பு. உத்தரகண்ட், இமயமலையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு சிறுத்தை மூழ்கி இறந்தது. இயற்கையின் சக்தி மகத்தானது – வனவிலங்கு பாதுகாப்பில் கவனமாக இருப்போம்.” என்று பகிரப்பட்டுள்ளது.
