ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு வரும் 2026, அக்டோபர் 1 முதல் ஒரு முக்கிய விதிமுறை மாற்றம் அமலுக்கு வரவுள்ளது. இதுவரை ஏடிஎம் அல்லது வங்கி கிளைகள் மூலமாக நேரடியாகப் பணம் எடுப்பதை மட்டுமே மாதாந்திர இலவச பரிவர்த்தனைக் கணக்கில் எஸ்பிஐ கருதி வந்தது. ஆனால் புதிய மாற்றத்தின்படி, யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளும் இனி இலவச வரம்பிற்குள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில், பிஎஸ்பிடி கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு நான்கு முறை மட்டுமே இலவசமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக, ஏடிஎம் வழியாக இரண்டு முறையும், மொபைல் செயலி வழியாக இரண்டு முறையும் நீங்கள் பணம் அனுப்பினால், அந்த மாதத்திற்கான நான்கு இலவச வரம்பும் முடிவடைந்துவிடும். இந்த இலவச எல்லையைத் தாண்டி செய்யப்படும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடியாத நடுத்தர குடும்பங்கள் மற்றும் எளிய மக்களுக்காகவே இந்த பிரத்யேக வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. அன்றாட செலவுகளான மளிகைப் பொருட்கள் வாங்குதல், வீட்டு வாடகை கொடுத்தல் போன்றவற்றுக்கு அடிக்கடி குறைந்த அளவில் பணப் பரிமாற்றம் செய்யும் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பெரும் சுமையாக மாறும். வங்கியின் தரப்பில் இது ஒரு சிறிய கட்டணத் திருத்தமாகப் பார்க்கப்பட்டாலும், சாமானிய மக்களின் மாதாந்திர இலவச வரம்பு ஓரிரு நாட்களிலேயே காலியாகிவிடும் நிலை உருவாகியுள்ளது.
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…