“சுத்த முட்டாள்தனம்”… மனம் வலிக்கிறது… கரூர் துயரம் குறித்து கோபத்தின் உச்சத்தில் விஷால் வெளியிட்ட பதிவு…!

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள twitter பதிவில், முழுக்க முழுக்க முட்டாள்தனமானது. நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் பிரச்சார கூட்டத்தில் குழந்தைகள் உட்பட 39 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரமான நிகழ்வு. இந்த சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைத்தால் இதயம் வலிக்கின்றது.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். இதுவே இப்போது அக்கட்சி செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியாக இருக்கும். இனி எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்த ஒரு அரசியல் பேரணியும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை அவசியம் என்று விஷால் பதிவிட்டுள்ளார்

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago