பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டியதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கைதை மறுத்துள்ள சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண் பினாமி பெயர்களில் பல கோடி ரூபாய் சொத்துகள் முதலீடு செய்துள்ள விவரங்களை முந்தைய நாள் (நேற்று) வெளியிட்டதாலேயே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கைது தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
