சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சிபிஐ விசாரணையில் கரூர் விவகாரம் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட கட்சி பணிகளை விஜய் தொடர்ந்து செய்து வருகின்றார். கரூர் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது.
இப்படியான நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, “விஜய்யுடன் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, “நீங்க ரூ.1000 கோடி மதிப்புள்ள திரைப்பட வணிகத்தை விட்டு அரசியலுக்கு ஏன் வருகிறீர்கள்?” என நான் கேட்டேன். அதற்கு அவர் சிரித்தபடி, “இந்த மக்களுக்காக ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்’ என பதில் அளித்தார்” என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
