Connect with us

“என்னால பசி தாங்க முடியாது…” தூர்தர்ஷன் அலுவலகத்தில் கொடுத்த உணவை அலுமினியத் தட்டில் வைத்து சாப்பிட்ட சாவித்ரி..

CINEMA

“என்னால பசி தாங்க முடியாது…” தூர்தர்ஷன் அலுவலகத்தில் கொடுத்த உணவை அலுமினியத் தட்டில் வைத்து சாப்பிட்ட சாவித்ரி..

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.

சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான்.  அவர் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தர். ஆனால் அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிரதாப்தம் என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடையவே, வெற்றி பெற்றே ஆகவேண்டும் என அடுத்தடுத்து படங்களை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் அனைத்தும் அவருக்கு தோல்வியையேக் கொடுத்தன. இதனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலனைக் கெடுத்துக் கொண்டார்.

   

அவருக்கு நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்சனைகள் இருந்தன. இதற்கிடையில் காதல் கணவர் ஜெமினி கணேசனையும் பிரிந்தார். அவருக்கான வாய்ப்புகளும் குறைந்து போயின. இதனால் அவர் தூர்தர்ஷன் ஒலி நாடகங்களில் கூட நடிக்க ஆரம்பித்தார். அவர் புகழின் உச்சத்தில் இருந்த போது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார். ஆனால் தூர்தர்ஷன் நாடகத்துக்கு அவருக்கு 250 ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டதாம்.

 

ஒரு நாள் தூர்தர்ஷன் அலுவலகத்தில் அவர் இருந்த போது மதிய உணவு வேளை வந்ததும் அவர் உடல் சோர்வாகி பதட்டமாகிக் காணப்பட்டுள்ளார். அவரிடம் அங்கிருந்தவர்கள் என்ன என்று விசாரிக்க “நான் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட வேண்டும்” எனக் கூறியுள்ளார். அவர்கள் சாப்பாடு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என சொல்ல “இல்லை என்னால் பசி தாங்க முடியவில்லை. இங்கிருப்பதை எதையாவது கொடுங்கள்” எனக் கூறி கேண்டீனில் இருந்த தக்காளி சாதத்தை அலுமினியத் தட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார்.

அதை சாப்பிட்டதும் நார்மல் ஆன அவர் மாத்திரைப் போட்டுக்கொண்டு இன்னும் நான்கு மணிநேரம் என்னால் நடிக்கமுடியும் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அப்போதைய தூர்தர்ஷன் இயக்குனராக இருந்த எம் எஸ் பெருமாள் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
To Top