அட கொடுமையே… மரண பயத்தைக் காட்டிய போதை ஆசாமி… ஓடும் ஆம்புலன்ஸில் கொலைவெறித் தாக்குதல்… நடுங்கவைக்கும் சம்பவம்…!

Spread the love

சென்னையில் கஞ்சா போதையில் இருந்த 53 வயது நபர் ஒருவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களைத் தாக்கி மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தரமணி பாரதி நகரில் காயங்களுடன் கிடந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமசாமி என்பவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றபோது, அவர் ஊழியர் யுவராஜை ஸ்டெதாஸ்கோப்பால் நெரிக்க முயன்றும், டிரைவர் மகேஷை கூர்மையான பொருளால் தாக்கியும் ரகளையில் ஈடுபட்டார்.

வேளச்சேரி காவல்துறையினர் அவரை முழுமையாகக் கட்டுப்படுத்தி, அதிகாலை 1.30 மணியளவில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கேயும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்தார். விசாரணையின்போது, தான் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்க மறுத்ததால் ஒரு கும்பல் தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உடலில் செலுத்தியதாக ராமசாமி தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கூற்று குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு ராமசாமி கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் நடத்திய ரகளையில் ஆம்புலன்ஸின் ஜன்னல்கள், இருக்கைகள் மற்றும் உள்ளே இருந்த மருத்துவ உபகரணங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. சேதமடைந்த உபகரணங்களின் மதிப்பு சுமார் ரூ 10 லட்சம் வரை இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

3 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

3 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

3 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

3 மணத்தியாலங்கள் ago