பள்ளி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் சாட்டை. இதில் சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்திருப்பார். தம்பி ராமையா, ஜூனியர் ராமையா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் பள்ளி மாணவியாக மஹிமா நம்பியார் நடித்திருப்பார்.
அவரை காதலிக்கும் கேரக்டரில் யுவன் நடித்திருப்பார். இவர் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் தமிழ் சினிமாவில் அடையாளத்தை பெற முடியவில்லை. இந்த சூழலில் டைரக்டர் பாலா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் முன்னாள் நடிகர், நிகழ்கால பரோட்டா மாஸ்டர் யுவன்.
டைரக்டர் பாலா படத்தில் நடிப்பது பலருக்கும் கனவு. எனக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. அவரது படத்தில் நடிக்க என்னை அழைத்தார். படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டர் எனக்கு. அதனால் அந்த காட்சியில் தத்ரூபமாக என் நடிப்பை வெளிப்படுத்த, தேனியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். காலையில் 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை, பிறகு மாலை 4 மணியில் இருந்து இரவு 12 மணி வரை என ஒரு வாரம் அந்த ஓட்டலில் வேலை செய்து பரோட்டா செய்ய கற்றுக்கொண்டேன். காய்கறி நறுக்குவது, டீ போடுவது என கற்றுக் கொண்டேன்.
ஆனால் நான் நடிப்பதாக இருந்த படத்தை ஆரம்பிக்கவில்லை. நாச்சியார் படத்துக்கு பிறகு ஆரம்பித்து விடலாம் என்று கூறினா். ஆனால் கடைசியில் அந்த படம் ஆரம்பிக்காமலேயே நின்றுவிட்டது. டைரக்டர் பாலா படத்தில் நடிப்பது குறித்து அறிவித்து விட்டதால், நான் செல்லும் இடங்களில் எல்லாம் பாலா படத்தில் நடிப்பது என்னாச்சு, என்னாச்சு என பலரும் கேட்டு எனக்கு ஒரு கட்டத்தில் டார்ச்சராகி விட்டது.
சாட்டைக்கு பிறகு நடித்த பல படங்களில் சில படங்கள் ஓடவே இல்லை. சில படங்கள் வரவே இல்லை. அதனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ஏதாவது பிஸ்னஸ் செய்யலாம் என்று நினைத்தேன், அதனால் ஹோட்டல் ஒன்று ஓபன் பண்ணினேன், எனது அப்பா பெரோஸ் கான், ஒரு இயக்குனர். நான் அவரது உதவி இல்லாமல் தான் சொந்தமாக இந்த ஹோட்டலை நடத்தி வருகிறேன், இன்னொரு பிரென்ச் துபாயில் உள்ளது. அதற்க்கு அடிக்கடி சென்று வருகிறேன். மேலும், என்ன தான் முதலாளியாக இருந்தாலும் இந்த ஹோட்டலில் நான் நிறைய வேலைகளை செய்வேன் என்று தன்னுடைய வாழ்க்கை பயணங்களை பகிர்ந்தார் நடிகர் யுவன்.