“விஜய் என்ன புடுங்குவான்?” கூத்தாடி அயோக்கிய பயலுக… சாட்டை துரைமுருகனின் ஒருமைப் பேச்சால் அதிரும் அரசியல் களம்.. தவெகவினர் கொதிப்பு..!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love

கரூர் வேலுசாமிபுரத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் நேற்று (பிப். 9) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஒருமையில் பேசி மிகக் கடுமையாகச் சாடினார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி அவர் இந்தப் பேச்சை முன்வைத்தார்.  41 பேரின் மரணத்திற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காத கரூர் காவல்துறையை அவர் வன்மையாகக் கண்டித்தார். துணிச்சல் இருந்திருந்தால் விஜய் கரூரை விட்டுச் செல்லாமல் அங்கேயே இருந்திருக்க வேண்டும் என்றும், அவர் ஒரு “பச்சோந்தி” மற்றும் “கோழை” என்றும் விமர்சித்தார்.

மக்களுக்கு ஒன்னுனா? இந்த விஜய் வருவான் என்கிறார். அவன் பிடுங்குவான். காமராஜர், கக்கன், முத்துராமலிங்க தேவர் போன்ற தலைவர்கள் அரசியல் செய்த மண்ணில், “சினிமா கூத்தாடி அயோக்கிய பயலுகளை” ஒழித்துக் கட்டுவதே தங்கள் அரசியல் இலக்கு எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு வீட்டுக்கு ஒரு விஜய் தேவையில்லை; மாறாக, தேசப்பற்றுமிக்க தலைவர்கள்தான் தேவை என்றும், தவெக தலைவர் ஒரு “தற்குறி” என்றும் மிகவும் ஆவேசமாகப் பேசினார். இந்தக் கூட்டத்தின்போது தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.