காலையிலேயே பரபரப்பு… விஜய் தொகுதியில் போட்டியிடுவேன்… அதிரடியாக அறிவித்தார்….!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தலில் விஜய்க்கு எதிராக களம் காண்பேன் என்று சாட்டை துரைமுருகன் அதிரடியாக அறிவித்துள்ளார். Youtube சேனலில் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழகம் கட்சியை விமர்சிக்கும் சாட்டை துரைமுருகன் விஜய் போட்டியிட உள்ள தொகுதியில் அவருக்கு எதிராக நிச்சயம் போட்டியிடுவேன் என்ற உறுதிப்பட தெரிவித்துள்ளார். சீமானுக்கு ஆதரவாக பேசினாலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளது.