Categories: சினிமா

சொந்தக்காரங்களே அப்படி பண்ணிட்டாங்க.. அந்த பயம் போகவே இல்லை.. சத்யராஜ் மகளின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரல்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் தனது திறமையால் முன்னேறிய நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். சிவராஜ் சினிமாவில் ஹீரோவாக இருக்கிறார். திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் மகிழ்மதி என்ற இயக்கம் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். விரைவில் திவ்யா அரசியலிலும் நுழையப் போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திவ்யா தனது சமூக வலைதள பக்கத்தில் கோவையில் தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, எனது வளர்ச்சி பிடிக்காமல் எனது உறவினர்களே ஆள் வைத்து அடித்ததால் கோயம்புத்தூர் என்றாலே எனக்கு பயமாக இருக்கும். ஒரு நாள் காசு கொடுத்து என்னை அடிக்க அடியாட்களை அனுப்பினர். அந்த சமயத்தில் எனக்கு மாதவிடாய் வந்து ரத்தப்போக்கும் அதிகமானது. பதற்றத்தில் எனது போனையும் மிஸ் பண்ணி விட்டேன். எப்படியோ அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்து விட்டேன்.

சென்னைக்கு வந்த பிறகும் அந்த சம்பவத்தை நினைத்து மன உளைச்சலுக்கு ஆனேன். எனது அப்பா விஷயம் தெரிந்து மிகவும் கோபப்பட்டார். என்னுடைய வாழ்க்கையில் ஆண்கள் எனக்காக சண்டை இடுவதை நான் விரும்ப மாட்டேன். நானே அதை எதிர்கொள்வேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதை ஒப்பிடும்போது எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை. ஆணவ கொலைக்காகவும், காதலர்களை பிரிப்பதற்காகவும், பெண்களை இழிவு படுத்தவும் மதங்கள் பயன்படுத்தப்படுகிறது.

நான் கடுமையாக தாக்கப்பட்டாலும் பரவாயில்லை. இது போன்ற மதங்களுக்கு எதிராகவும் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பேன். வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. எனக்குள் இருக்கும் காயங்கள் இன்னும் ஆறவே இல்லை. இருந்தாலும் அன்புடனும் மனதில் தைரியத்துடனும் கோவைக்கு தொடர்ந்து செல்வேன். வலிமையான பெண்கள் அன்பு செலுத்துவதை நிறுத்த மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

3 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

10 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

14 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

18 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

20 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

21 minutes ago