அந்த கட்சில இருந்து எனக்கு அழைப்பு வந்தது.. நான் இதுக்காக அரசியலுக்கு வரல.! சத்யராஜ் மகள் வெளியிட்ட வீடியோ வைரல்..

By Ranjith Kumar on மார்ச் 13, 2024

Spread the love

1979 ஆம் ஆண்டு “சட்டம் என் கையில்” என்ற பட மூலம் தமிழ் திரையுலைகள் ஹீரோவாக அறிமுகமானவர்தான் “சத்யராஜ்” அவர்கள். அதன் பின்னதாக கண்ணன் ஒரு கைக்குழந்தை, முதல் இரவு, குருவிக்கூடு, தம்பிக்கு எந்த ஊரு, அமைதிப்படை, ஆகாயத்தாமரைகள் போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாக 90 காலகட்டத்தில் வலம் வந்தார்.


தற்போது இவர் சப்போட்டிங் கேரக்டரில் ராஜா ராணி, பாகுபலி, நாய்கள் ஜாக்கிரதை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜாக்சன் துரை, கடைக்குட்டி சிங்கம் போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்து வருகிறார். இவர் சினிமாவும் தாண்டி பல சமூக நீதிக்காக போராடி வருகிறார், அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் மட்டும் சம்பாதிக்காமல் பல துணிக்கடை, நகை கடை போன்றவற்றை நடத்தி வருகிறார். 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிபி சத்யராஜ், திவ்யா சத்யராஜ் என்று இரு குழந்தைகள் உள்ளார்கள்.

   


சத்யராஜ் மகனான சிபி அவர்கள் தற்போது சினிமாவில் ஓரளவுக்கு பெயர் பெற்று தனக்கென்று ஒரு இடம் பிடித்து நடித்து வருகிறார். சத்யராஜ் இன்னொரு மகள் திவ்யா சத்யராஜ் அவர்கள் மெட்ராஸ் யூனிவர்சிட்டி “நியூட்ரிஷியன்” படிப்பை முடித்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு “மகிழ்மதி இயக்கம்” என்று ஒரு அறக்கட்டளை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சமூக ஆர்வலரும், அரசியல் கட்சி விமர்சகர், தந்தை போல் இவரும் பெரியாரிஸ்ட் ஆவார். இவர் நீண்ட காலமாக சமூக ஊடகங்கள் மூலம் தன் அரசியல் கட்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து வந்தார்.

   


தற்போது ஒரு அரசியல் கட்சி இவரை அணுகிய போது இவர் மதன் சார்ந்து எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று மறுத்தலித்துள்ளார். சற்று அதைப்பற்றி இவர் விரிவாக வீடியோ மூலம் அறிக்கையாக பேசி வெளியிட்டு இருக்கிறார்; “என் மேல் அன்பு கொண்ட மக்களுக்கு வணக்கம். அரசியலில் இறங்கப் போகிறேன் என்று பத்திரிகை நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன். அதை தொடர்ந்து என்னை எல்லாரும் கேட்கும் கேள்வி? MLA-க்கு நிற்க போகிறீர்களா ? இல்லை ராஜசபா உறுப்பினர் மேல் ஆசை இருக்கிறதா? உங்க அப்பா சத்யராஜ் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்று பலரும் பலவிதமாக கேட்கிறீர்கள்.

 

நான் எந்த மதச் சார்ந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை, தனி கட்சி வைக்க போவதில்லை, வரும் எலக்சன் முடிந்த பின் நான் எந்த கட்சிக்கு ஆதரவளிக்க போகிறேன் என்று தெரிவிக்கிறேன். அது மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்து மேன்மை படிப்பை முடித்து, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளுக்கு “மகிழ்மதி இயக்கம்” மூலம் நான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கி வருகிறேன். சமூக நலனுக்காகவும் சமூக மாற்றத்துக்கும் நான் போராடி வருகிறேன்”. என்று வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

author avatar
Ranjith Kumar