பேச முடியாமல் வந்த கண்ணீர்.. “கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்”.. சத்யராஜ் கொடுத்த எமோஷனல் ஸ்பீச்.. மேடையில் கதறி அழுத சத்யராஜ்..!!

By Muthu Mani on ஆனி 6, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பாபுவிடம் சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார். இத்தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நடிகர் சத்யராஜ் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் தம்பி உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் ஆளுங்கட்சியை “நோண்டி நொங்கு எடுத்து, கிழி கிழி என கிழித்து வருகிறார்” என்று பாராட்டினார். உதயநிதி சட்டசபையில் திடீரென எழுந்து கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஆளுங்கட்சியினர் திணறுவதாகவும், அதற்கு அவர்கள் ட்விட்டரில்தான் பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தற்போதைய முதல்வர் சட்டசபையில் அமைதியாகவும், நன்றி தெரிவிக்கும் கூட்டங்களில் ஆக்ரோஷமாகவும் பேசுவதுதான் அவரது லாஜிக் என்று கிண்டல் செய்தார்.

   

கொளத்தூர் தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் தான் ஸ்டாலினுக்கு போன் செய்தபோது, அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப் புறப்பட்டுச் சென்றதாக சத்யராஜ் குறிப்பிட்டார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் அழுததாகக் கூறிய சத்யராஜ், மேடையில் பேசும்போதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுதார். தான் எதையும் சாதாரணமாகவும் கிண்டலாகவும் எடுத்துக்கொள்ளும் நபர் என்றாலும், அண்ணா மற்றும் கருணாநிதி வழியில் முதல்வர்களுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்த ஸ்டாலினின் இந்தத் தோல்வியை மாத்திரம் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கதறினார்.

   

தமிழ்நாட்டைப் பொற்காலமாக மாற்றியது தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கைகளில் ஏந்தி நடந்த ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சிதான் என்றும், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தது சாதாரண விஷயமல்ல என்றும் சத்யராஜ் பெருமிதம் கொண்டார். தொடர்ந்து தற்போதைய முதல்வர் விஜய்யை விமர்சித்த அவர், “இது ஒரு முதல்வர் பேசும் பேச்சா? எனக்குக் கூடப் பல கெட்ட வார்த்தைகள் தெரியும்” என்று சாடினார். “மக்களாகிய உங்களுக்கு எல்லாம் பட்டால்தான் புத்தி வரும், பட்டுத்தான் திருந்துவீர்கள்; இப்பேர்ப்பட்ட உன்னதமான தலைவரைத் தோற்கடித்துவிட்டீர்களே” என்றும் சத்யராஜ் வருத்தத்துடன் பேசினார்.