கமல்ஹாசனின் முக்கியமான 2 படங்களில் நடிக்க மறுத்த சத்யராஜ்.. சரித்திர படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. பிரபலம் பகிர்ந்த தகவல்..!!

By Priya Ram on மே 25, 2024

Spread the love

நடிகர் சத்யராஜ் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். சத்யராஜின் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்கள் விருமாண்டி, வேட்டையாடு விளையாடு.

sathyaraj shared about his friendship with kamalhaasan | ”நான் என்ன பேசினாலும் அதில் கமல்ஹாசன் இருப்பாரு “ - மனம் திறந்த சத்தியராஜ்

   

இந்த படங்களில் வில்லனாக நடிக்க முதலில் கமல்ஹாசன் சத்யராஜ் தான் அணுகியுள்ளார். முதலில் விருமாண்டி படத்தில் நெப்போலியன் நடித்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் சத்யராஜ் தனக்கு இந்த கதாபாத்திரம் சவாலானதாக இருக்காது என கூறி நேராக கமல்ஹாசனிடம் சென்று காக்கி சட்டை மாதிரி இது ஒரு நல்ல கதாபாத்திரமாக இல்லை.

   

Indian-2 with Kamal and Sathyaraj alliance.. Fans are in anticipation.. | கமல், சத்யராஜ் கூட்டணியில் இந்தியன்-2.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

 

இந்த தடவை வேண்டாம் நிச்சயமாக அடுத்த படத்தில் நடிக்கிறேன் என கமலிடம் கூறியுள்ளார். இதனையடுத்து வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்க கமல்ஹாசன் அழைத்தார். அதில் நடிக்கவும் சத்யராஜ் விரும்பாததால் பிரகாஷ்ராஜை கமல்ஹாசன் நடிக்க வைத்தார். இந்த இரண்டு படங்களிலும் சத்யராஜ் நல்ல வாய்ப்பை தவறவிட்டார்.

sathyaraj shared about his friendship with kamalhaasan | ”நான் என்ன பேசினாலும் அதில் கமல்ஹாசன் இருப்பாரு “ - மனம் திறந்த சத்தியராஜ்

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் ஒரு சரித்திர படத்தை எடுக்கப் போவதாகவும் அதில் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என சத்யராஜை அழைத்தார். அப்போது சத்யராஜ் பல படங்களில் ஹீரோவாக நடித்ததால் மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்தார். மேலும் கமல்ஹாசனிடம் சென்று அந்த படத்தில் நடித்தால் சினிமா வாழ்க்கையில் சறுக்கல் வந்து விடுமோ என கமலஹாசனிடம் கூறியுள்ளார்.

சத்யராஜை வளர்க்க கமல் போட்ட திட்டம்.. நட்புக்காக சொந்த செலவில் செய்த உதவி - Cinemapettai

கமல்ஹாசன் சமாதானப்படுத்தியும் சத்யராஜ் தயக்கம் காட்டியதால் அந்த படம் கைவிடப்பட்டது. ஒருவேளை அந்த படத்தில் நடித்திருந்தால் கமல் அந்த படத்தை எடுத்திருப்பார். தமிழ் சினிமாவில் அது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என சத்யராஜ் இன்றும் வருந்துவதாக ஒரு பேட்டியில் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

The hero of a film is the script - opines actor Sathyaraj | ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான் - நடிகர் சத்யராஜ் கருத்து