மார்க்கெட் இருந்தபோது ரிஜக்ட் பண்ண கதைய மார்க்கெட் போனதும் நடித்த சத்யராஜ்… இந்த படத்துக்குப் பின்னாடி இப்படி Backstory யா?

By vinoth on ஆனி 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். சத்யராஜ் கதாநாயகனாக நடித்த கடைசி கால படங்களில் ஒன்று அடிதடி. அந்த படத்தில் தன்னுடைய நிஜ வழுக்கை தலையோடு 50 வயது ரௌடி வேடத்தில் நடித்திருப்பார்.

   

இந்த படத்தின் கதையை சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் சிவராஜ் சத்யராஜுக்கு சொல்லி இருந்தாராம். ஆனால் அப்போது சத்யராஜுக்கு ஹீரோவாக நல்ல மார்க்கெட் இருந்ததால் அந்த கதையில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். ஆனால் சில ஆண்டுகளில் அவர் மார்க்கெட் சரிந்து ஹீரோ வேடங்கள் கிடைக்காத போது, அதே கதையில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தாராம்.

 

அப்படி உருவானதுதான் அடிதடி திரைப்படம். அந்த படம் வெளியாகி பெரிய வெற்றியைஇப் பெறவில்லை என்றாலும் இப்போதும் அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாகதான் அமைந்திருக்கும். அதே போல மகாநடிகன் என்ற திரைப்படத்திலும் கதையே கேட்காமல்தான் சத்யராஜ் நடிக்க ஒத்துக்கொண்டாராம். இந்த இரு படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.