Categories: சினிமா

தவறை உணர்ந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்ட சத்யா… விஜயாவின் மாமியார் பாசம்… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரவுடிகளிடம் சண்டையிட்ட மீனாவின் தலையில் அடிபடுகிறது. உடனே முத்து அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறான். இதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

இன்றைய எபிசோடில் வீட்டில் மீனாவின் அம்மா அழுது கொண்டிருக்கிறார். அப்போது சத்யா வருகிறான் என்னாச்சும்மா அப்படின்னு கேட்கும்போது மீனாவின் அம்மா சத்யவை போட்ட அடி அடின்னு அடித்து விட்டு உன்னால தான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை ஆயிடுச்சு. இந்த ரவுடி கூட சேராத நான் எவ்வளவோ சொன்னேன்ல அவன் மீனாவ பிடிச்சு தள்ளிவிட்டு தலையில் அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கா அப்படின்னு சொல்லி அழுகிறான். உடனே கோபம் அடைந்த சத்யா நேராக தனது நண்பன் ரவுடி சிட்டியிடம் போய் சண்டையிடுகிறான். நீ என் பிரண்டு தான் அதுக்காக எங்க அக்காவ நீ இப்படி தள்ளிவிடலாமா இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்னு சொல்லிட்டு வெளியே வந்து விடுகிறான்.

இங்கே ஹாஸ்பிடலில் முத்துவும் மீனாவும் டாக்டரை பார்த்துவிட்டு காத்திருக்கின்றனர். அப்போது மீனாவின் அம்மா சீதா சத்யா மூன்று பேரும் வருகின்றனர். மீனாவை பார்த்ததும் அவங்க அம்மா ரொம்ப அழுகிறார். மீனாவின் அம்மா சீதா இருவரும் சேர்ந்து சத்யாவை மீண்டும் திட்டுகின்றனர். அப்போது மீனா விடுமா தெரியாம பண்ணிட்டான் அப்படின்னு சொல்லிட்டு சத்யாவுக்கு ஆதரவாக பேசுகிறாள். மீனா பின்பு சத்யாவிடம் சத்யா நீ பண்றது சரி இல்லடா உன் வாழ்க்கை நல்லா அமையனும் அதுக்காக தான் நான் கஷ்டப்பட்டேன் அப்பா நம்மள விட்டுட்டு போய்ட்டாங்க இனிமே இந்த குடும்பத்தை நல்லா படிச்சு சம்பாதித்து நீ தான்டா காப்பாத்தணும் அப்படின்னு பேசுகிறாள். உடனே சத்யா தாங்காமல் கதறி அழுகிறான். அக்கா என்னை மன்னிச்சிருக்கா இவ்வளவு நாள் தப்பான வழியில போயிட்டேன். இனிமே நான் அந்த சிட்டி கூட சேர மாட்டேன். ஒழுங்கா படிச்சு நான் வேலைக்கு போறேன் அப்படின்னு சொல்கிறான். அந்த நேரம் முத்து வந்து விடுகிறார். இந்தாங்க ஜூஸ குடிங்க மீனாவுக்கு முடியாம இருக்கா அத்தை நீங்க வேற அழுது பிரஷர் ஏறி இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு சீதாவிடம் இந்தா சீதா ரெண்டு பேருக்கும் ஜூஸ் ஊத்தி கொடு அப்படின்னு சொல்லிவிட்டு முத்து வெளியே வந்து விடுகிறான்.

பின்னர் முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டுக்கு வந்தவுடன் அண்ணாமலை மீனாவின் தலையில் கட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியாக என்னாச்சு என்று கேட்கிறார். உடனே முத்து இல்லப்பா வண்டில போகும்போது தெரியாம இன்னொரு வண்டிக்காரன் குறுக்க வந்துட்டான் கீழே விழுந்துட்டா அதான் லைட்டா அடிபட்டுருச்சு வேற ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லி சமாளிக்கிறான் முத்து. உடனே அண்ணாமலை பெரிய அடி ஒன்னு இல்லையே அப்படின்னு கேக்குறாரு. இல்ல மாமா லேசான அடி தான் கட்டு தான் பெருசா போட்டு இருக்காங்க அப்படின்னு சொல்கிறார் மீனா. உடனே அண்ணாமலை முதல்ல சுத்தி போடு முத்து அவளுக்கு எல்லாருடைய கண்ணு பட்டதுனால இப்படி ஆயிடுச்சு வேற எதுவும் இருக்காது அப்படியே சொல்லிட்டு இருக்கும் போதே விஜயா அங்கு வந்து விடுகிறாள்.

என்னடி இப்படி தலையில் கட்டுப்போட்டுட்டு வந்திருக்க என்ன ஆச்சு அப்படின்னு கேட்கிறாள் விஜயா. இல்ல அத்தை வண்டில போகும்போது கீழே விழுந்துட்டேன் அப்படின்னு சொல்கிறாள் மீனா. உடனே விஜயா வாய் மட்டும் இவ்வளவு தூரம் பேசுற இல்ல வண்டில போகும்போது பார்த்து போகணும் உனக்கு தெரியாதா பலமா அடிபட்டுடுச்சா ரொம்ப வலிக்குதா அப்படின்னு முதல் முறையாக மாமியார் பாசத்துடன் மீனாவிடம் பேசுகிறாள் விஜயா. இதை கண்டு முத்துவும் அண்ணாமலையும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போதே சரிங்க மாமா நான் மாத்திரை போட்டேன் வலி பரவால்ல நான் போய் சமைக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கும்போதே விஜயா உடனே இல்ல இல்ல வேண்டாம் நீ ரெஸ்ட் எடு இன்னைக்கு நானே சமைக்கிறேன் அப்படின்னு கிச்சனுக்கு செல்கிறாள். இதை பார்த்து முத்து அப்பா இது உண்மையிலேயே நம்ம அம்மா தானா அப்படின்னு பேசிட்டு இருக்காங்க. அதுக்கு அடுத்ததாக மீனாவுக்கு கஞ்சி வைத்து முத்து வந்து கொடுக்கிறான். நம்ம என்னதான் சண்டை போட்டாலும் பேசாம இருக்க கூடாது மீனா அது எனக்கு தாங்கவே முடியாது அப்படின்னு சொல்லிக் கொண்டிருக்கிறார். மீனா அதைக் கேட்டு அழுகிறாள். இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

இனி எந்த பயமும் இல்லை… பயணத்தில் மீண்டும் ஆபத்தில் சிக்காமல் இருக்க… பெங்களூரு பெண் செய்த அதிரடி காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…

2 minutes ago

“ராகுல் காந்தியை அலேக்காக தூக்கிய போலீஸ்…” டெல்லியை உலுக்கிய பிரம்மாண்ட எதிர்க்கட்சி போராட்டம்…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…

5 minutes ago

ஐயோ…! “திடீரென குறுக்கே பாய்ந்த காளை:” பைக்கோடு தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…

13 minutes ago

என்னது… புது iPhone Pro இப்பவே லீக் பண்ணிட்டாரா?… கார்த்திக் ஆர்யன் போட்ட போட்டோவால்… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… இணையத்தில் வைரல்…!!

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் லண்டன் ஐ பின்னணியில் நின்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில்…

19 minutes ago

கைநிறைய சம்பளம் வாங்கலாம்…! பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான 'பேங்க் ஆஃப் பரோடா' 'வெல்த் எக்ஸிகியூட்டிவ்' மற்றும் 'கிரெடிட் அனலிஸ்ட்' ஆகிய பதவிகளுக்கு…

24 minutes ago

நம்ம ஊரு தான் கெத்து… பிரான்சில் நடுரோட்டில் நின்ற பேருந்து… புலம்பித் தவித்த பெண் டாக்டர்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பிரான்சில் பேருந்து பழுதாகி வழியில் சிக்கித் தவித்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர், "இந்தியர்களின் செயல்பாட்டு முறை முற்றிலும் வேறுபட்டது"…

27 minutes ago