#image_title
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து எஸ் பாஸ் சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அவரை வில்லன் நடிகராக்கி பிரபலமாக்கியவர் அவருடைய நெருங்கிய நண்பரான மணிவண்ணன்தான். அவர் இயக்கிய நூறாவது நாள் திரைப்படம்தான் சத்யராஜுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் ரஜினி, கமல் என பலருக்கு வில்லனாக நடித்துக் கதாநாயகன் ஆனார் சத்யராஜ். அதன் பின்னர் 100 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகரானார்.
சத்யராஜ் எம் ஜி ஆரின் மிகத் தீவிரமான ரசிகர். தான் முன்னணி நடிகரானதும் எம் ஜி ஆரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. எம் ஜி ஆருக்கும் சத்யராஜை மிகவும் பிடித்துவிட அவரின் குடும்ப நிகழ்வுகளுக்கு எல்லாம் சென்று வாழ்த்தியுள்ளார்.
சத்யராஜ் மீதுள்ள அன்பால் தான் முதலமைச்சர் ஆன போது ”உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்” எனக் கூறியுள்ளார். அப்போது சத்யராஜ் “எனக்கு நீங்கள் உடல்பயிற்சி செய்ய பயன்படுத்தும் கர்லா கட்டையைக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். சதய்ராஜ் எனக்கு காலேஜ் வைத்துக் கொடுங்கள், ஸ்கூல் கொடுக்க இடங்கொடுங்கள் எனக் கேட்பார் என நினைத்திருந்தவருக்கு இது அதிர்ச்சியாக அமைந்ததாம். அதன் பின் எம் ஜி ஆர் அந்த கர்லா கட்டையைக் கொடுக்க இப்போது வரை அதை பாதுகாப்பாக பாதுகாத்து வருகிறாராம் சத்யராஜ்.
டெல்லியின் ரோஹினியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கழிப்பறையில் 11 வயது சிறுவன் நான்கு மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட…
திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய பேராசிரியர் லக்ஷ்மன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .…
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில் 100 கோடி ரூபாய் திருடிய சம்பவத்தில் அந்த பணத்தை திருடியது நான் தான்,…
தமிழ் சினிமாவின் மிகச்சிறப்பான படங்களை இயக்கிய பிரபலமானவர் இயக்குனர் சேரன். தான் இயக்கிய ஆட்டோகிராப் படம் வெளியாகி 21 வருடங்கள்…
திமுக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை பரிந்துரை செய்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன.…