Categories: சினிமா

அஜித்துக்காக கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

அஜித்தின் சினிமா கேரியரில் அவர் சீனியர் இயக்குனர்களோடு பணியாற்றவே இல்லை என்பதுதான் ஒரு குறையாக உள்ளது. ஆனால் இயக்குனர் மகேந்திரன் அஜித்துக்காகக் கூடைப்பந்து வீரன் ஒருவரை கதாநாயகனாக வைத்து கதையெழுதி அவரிடம் சென்று சொன்னாராம். கதையைக் கேட்ட அஜித் “இந்த படத்தை நீங்களே தயாரியுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” எனக் கூறினாராம்.

இதைக் கேட்டு நெகிழ்ந்து போயுள்ளார் மகேந்திரன். அப்போது அஜித்தின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்தது. அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள். ஆனால் தனக்கு முன்பின் பழக்கமில்லாத தன்னை அந்த படத்தை தயாரிக்க சொன்ன அஜித்தின் குணம் மகேந்திரனை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவே இல்லையாம்.

இந்த தகவலை இயக்குனர் மகேந்திரன் குமுதம் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு அஜித் பிறந்தநாள் சிறப்பு மலரில் தெரிவித்துள்ளார். அஜித் எப்போதுமே சீனியர்களுக்கு அதிக மரியாதைக் கொடுத்து அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்பவர். அவரின் இந்த குணத்துக்கு மகேந்திரன் சொன்ன சம்பவமே சான்று.

vinoth

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

3 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

3 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago