Categories: சினிமா

என்ன வேணுமோ கேளு என்ற எம் ஜி ஆருக்கு ஷாக் கொடுத்த சத்யராஜ்… அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து எஸ் பாஸ் சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவரை வில்லன் நடிகராக்கி பிரபலமாக்கியவர் அவருடைய நெருங்கிய நண்பரான மணிவண்ணன்தான். அவர் இயக்கிய நூறாவது நாள் திரைப்படம்தான் சத்யராஜுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் ரஜினி, கமல் என பலருக்கு வில்லனாக நடித்துக் கதாநாயகன் ஆனார் சத்யராஜ். அதன் பின்னர் 100 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகரானார்.

சத்யராஜ் எம் ஜி ஆரின் மிகத் தீவிரமான ரசிகர். தான் முன்னணி நடிகரானதும் எம் ஜி ஆரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. எம் ஜி ஆருக்கும் சத்யராஜை மிகவும் பிடித்துவிட அவரின் குடும்ப நிகழ்வுகளுக்கு எல்லாம் சென்று வாழ்த்தியுள்ளார்.

சத்யராஜ் மீதுள்ள அன்பால் தான் முதலமைச்சர் ஆன போது ”உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்” எனக் கூறியுள்ளார். அப்போது சத்யராஜ் “எனக்கு நீங்கள் உடல்பயிற்சி செய்ய பயன்படுத்தும் கர்லா கட்டையைக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். சதய்ராஜ் எனக்கு காலேஜ் வைத்துக் கொடுங்கள், ஸ்கூல் கொடுக்க இடங்கொடுங்கள் எனக் கேட்பார் என நினைத்திருந்தவருக்கு இது அதிர்ச்சியாக அமைந்ததாம். அதன் பின் எம் ஜி ஆர் அந்த கர்லா கட்டையைக் கொடுக்க இப்போது வரை அதை பாதுகாப்பாக பாதுகாத்து வருகிறாராம் சத்யராஜ்.

vinoth

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

4 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

5 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

6 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago