சுப்ரமணியபுரம் பரமா-வோடு கூட்டணி சேரும் அன்னபூரணி.. மாட்டிகிட்டு முழிக்கப்போகும் விக்னேஷ் சிவன்..

By Archana

Published on:

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சினிமா பயணம் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். நான் சொல்வது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அல்ல, சினிமாவில் அவர் பல தடங்களை தாண்டி தன்னுடைய திறமையால் இந்த இடத்துக்கு வந்துள்ளார் என்பது தான். கேரள மாநிலத்திலிருந்து வந்து தமிழை தாண்டி தற்போது PAN இந்திய ஸ்டாராக மகுடம் சூடி உள்ளார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள்னு செட்டில் ஆன நயன்தாரா

கடந்த ஆண்டு வெளிவந்த “ஜவான்” படத்தின் மூலம் இந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் சவுத் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார். தன்னுடைய ட்வின்ஸ்-களுடன் பிசியாக இருக்கும் நயன்தாரா. படப்பிடிப்புக்காக அதிகம் வெளியில் செல்வதில்லை. குழந்தைகளுடன் பிசியாக இருக்கும் நயன்தாரா சோசியல் மீடியாக்களில் அவர்களின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு தான் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் நயன்.

   

ஒருபக்கம் இவருடைய கணவர் LIC படத்தில் பிஸியாக இருந்து வருகிறார், கணவர் இயக்கம் அந்த படத்தில் பிரதீப்புக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் நயன்தாரா. இதனை தொடர்ந்து தனி ஒருவன் 2 மற்றும் மண்ணாங்கட்டி since 1960 போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் நயன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி, இறைவன் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக ஆதி வாங்கியது, ஆனால் அட்லீயின் ஜவான் படத்தின் மூலமாக தனது பெயரை தக்கவைத்துக்கொண்டார் நயன் என்று தான் சொல்ல வேண்டும்.

சசிகுமாருடன் கூட்டணி சேரும் நயன்தாரா:

சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ள சசிகுமார், தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனராக காலம் இறங்கவுள்ளார் என்றும் சொல்லாம். நயன்தாரா இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பெண்களை மய்யமாக வைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியாக இந்த படம் உருவாக உள்ளது. இது குறித்து எந்த ஒரு அறிவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

தற்போது ஷூட்டிங்-இல் பிசியாக இருக்கும் விக்னேஷ் சிவன், ஷூட்டிங் முடிந்தவுடன் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவார் என்று சொல்ல்லாம். தற்போது குழந்தைகளுடன் இருக்கும் நயன், ஷூட்டிங்-இல் பிசியாகி விடுவார் என்று தான் சொல்ல வேண்டும்.

author avatar
Archana