Categories: சினிமா

15 வருடங்களை கடந்த ‘சுப்ரமணியபுரம்’… ரீ ரிலீஸை புது வெர்சன் ட்ரைலருடன் அறிவித்த சசிகுமார்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

Spread the love

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. படத்தின் நாயகனாக ஜெய் நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் இயக்குனர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய ராஜ முஹமத் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இவரது இசையில் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இன்றும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் விருப்ப பட்டியிலில் இருந்து வருகிறது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற ‘கண்கள் இரண்டால்’ பாடல் பட்டி தொட்டி வரை ஹிட் அடித்தது. மதுரை நிலப்பரப்பில் ரவுடிசத்தையும் அதன் பின்னணியில் நடக்கும் அரசியலையும் வித்தியாசமான அணுகுமுறையில் காட்டியிருந்தார் இயக்குனர் சசிகுமார்.

சுப்ரமணியபுரம் படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகள் ஆனாலும், அதற்கான மவுசு இன்றளவும் குறைந்தபாடில்லை. இதனைக் கருத்தில் கொண்டு அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன்படி சுப்ரமணியபுரம் படத்தை வருகிற ஆக்ஸ்ட் 4-ந் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி, அதன் புது வெர்ஷன் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜேம்ஸ் வஸந்தன் இசையமைத்து தீம் மியூசிக் உடன் கூடிய அந்த புது வெர்ஷன் டிரைலர் செம்ம வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

4 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

8 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

17 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

42 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

49 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

1 மணத்தியாலம் ago