#image_title
தமிழ் சினிமாவில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான திரைப்படம் கருடன். இப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கின்றது. இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூரி மற்றும் சசிகுமார் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைகளை யோசித்து இயக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களில் முதன்மை இடத்தில் இருப்பது வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் கடைசியாக நடிகர் சூரி விடுதலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இதுவரை நகைச்சுவை நடிகராக மட்டுமே சூரியை பார்த்து வந்த நமக்கு விடுதலை படத்தில் ஹீரோவாக குமரேசன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படம் வெளியாகி சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்தது. விடுதலை படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக அடுத்து நடித்துள்ள திரைப்படம் தான் கருடன். இந்த திரைப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்து பின்னர் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக மாறிய துரை செந்தில் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படத்தில் இடம்பெற்ற வசனம் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. விடுதலை திரைப்படத்தை போலவே இப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் எமோஷனல் காட்சிகள் நல்ல ஸ்கோர் செய்துள்ளது.
முன்னதாக படத்தின் ப்ரோமோஷனல் கலந்துகொண்ட சூரி காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அதற்கான காட்சிகளை மட்டுமே நடித்துவிட்டு செல்வோம். ஆனால் கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்வு இருப்பதாக உணர்கிறேன் என்று கூறியிருந்தார். இன்று கருடன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் சூரி இப்படத்திற்கு எட்டு கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நடிகர் சசிகுமார் இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கின்றார்.
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…
பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…