ரிலீசுக்கு முன்பே OTT உரிமைக்கு போட்டி போடும் நிறுவனங்கள்.. சசிகுமார் படத்துக்கு எகிறும் டிமாண்ட்..!

By Nanthini on மாசி 11, 2025

Spread the love

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சசிகுமார். இவர் ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கின்றார். இவருடைய இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவ்வாறு சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ஈசன் என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன.

Sasikumar is coming back to direct the film | மீண்டும் படம் இயக்க வரும்  சசிகுமார்

   

அதன்படி இறுதியாக சசிகுமார் நடிப்பில் உருவான இருக்கும் திரைப்படம் தான் நந்தன். இந்தத் திரைப்படத்தை சரவணன் இயக்கியிருந்த நிலையில் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.

   

சசிகுமார்- சிம்ரன் இணைந்து நடிக்கும் புதியப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்|  Sasikumar-Simran co-starring new movie has started shooting

 

இந்தத் திரைப்படம் ஒரு நல்ல குடும்ப கதை அம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து படம் வெளியீட்டுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ஓடிடி உரிமை என்பது மிகவும் குறைந்து விட்டது. குறைந்த விலைக்கு படங்களை வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.

சசிகுமார் - சிம்ரன் ஜோடி சேர்ந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படப்பிடிப்பு நிறைவு -  Sasikumar-Simran pair's 'Tourist Family' shooting completes

அதாவது hotstar மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் OTT உரிமையை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதற்கு முன்வந்துள்ளன. அவர்கள் கேட்கக்கூடிய தொகையை விட அதிகமாக கொடுத்து படத்தை வாங்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் படத்தின் கதை அந்த அளவுக்கு இருப்பதால் இந்த போட்டி நிலவுகிறது. இதனைப் போலவே சசிகுமாரின் அடுத்த படமான பிரீடம் திரைப்படத்திற்கும் இது போன்ற டிமாண்ட் நிலவுவதாக தெரிகிறது. இதிலிருந்து சசிகுமார் தன்னை தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் மற்றும் இயக்குனராக நிலை நிறுத்தியுள்ளது தெரிகிறது.