நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரு.மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக் கிறார். படத்துக்கு ‘திரு.மாணிக்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனன்யா இதில் நடிக்கிறார். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பி ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். இந்நிலையில் திரு. மாணிக்கம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதி சசிகுமார் குறித்து சமுத்திரகனி உருக்கமாக பேசியுள்ளார். அதாவது, சுப்ரமணியபுரம் படத்தில பணியாற்ற போகும் போது, சசிகுமார் என்ன நினைத்தான்னு தெரியல. ரெண்டு படம் பண்ணியிருக்காரு. 2000 எபிசோடு எடுத்திருக்காரு.

வேற ஏதாவது பண்ணிடுவாரோன்னு நினைச்சு எனக்கு பதிலா இன்னொரு சப்ஸ்டிட்யூட்டை என்னுடைய பக்கத்து அறையிலேயே வச்சிருக்கான். நான் நேரடியா அங்கெ போனேன். என்னடா என்னை நடிக்கவே கூப்பிடலயேன்னு கேட்டேன். ரெண்டு நாள் ரெஸ்ட் எடு, அதுக்கப்புறம் பண்ணுவோம்னு சொன்னான். அதுக்கப்புறமா ஒரே ஒரு சீன் மட்டும் நடிக்க வச்சான். இன்னைக்கு அவ்வளவுதான் நீங்க கிளம்போலாம்னு சொன்னான்.

படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. நான் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கூட்டத்தை எல்லாம் க்ளியர் பண்ண ஆரம்பித்தேன். அப்போது என்னை அழைத்து, அண்ணா நான் நடிக்கிறேன், நீங்க படம் எடுங்கன்னு சொன்னான். அப்படி தான் ஆரம்பித்தது எங்களுடைய நட்பு. அதுக்கப்புறம் இந்த சப்ஸ்டிட்யூட் மேட்டரையும் சொன்னான். அவனிடம் இருந்த உண்மை தான் இன்னைக்கி வரைக்கும் எங்களை பிரெண்ட்ஸ் ஆ வச்சிருக்கு என்றார்.
