பரபரப்பு..! “சசிகலா 52 லட்சம் கொடுத்தார்” பணப்பட்டுவாடாவை மேடையிலேயே போட்டுடைத்த வேட்பாளர்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சியினர்..!!

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கு.அன்பழகன், அண்மையில் சசிகலா தலைமையிலான அஇபுதமமுகவில் இணைந்து அந்தத் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜவில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அரசியல் நகர்வுகளால் அதிருப்தியுற்று அவர் சசிகலா முகாமுக்கு மாறினார். இந்நிலையில், நிலக்கோட்டையில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய சில தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

அக்கூட்டத்தில் பேசிய அன்பழகன், கடந்த 2001ஆம் ஆண்டு தான் அதிமுக சார்பில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டபோது, சசிகலா தாராளமாக நிதி வழங்கியதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். தனக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கியது மட்டுமின்றி, தேர்தல் செலவுகளுக்காக சசிகலா முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை தான் இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அதைத் தொடர்ந்து மீண்டும் தனது தனிப்பட்ட செலவுக்காக சசிகலா 2 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் செலவுக் கணக்குகள் தொடர்பாகக் கடுமையான விதிமுறைகள் இருக்கும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தொகுதிக்காக சசிகலா 52 லட்சம் ரூபாய் கொடுத்ததாக வேட்பாளரே பொதுவெளியில் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகனின் இந்தத் திடீர் வாக்குமூலம், அன்றைய காலகட்டத்திலேயே அதிமுகவில் பணப்பரிமாற்றம் எப்படியிருந்தது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்ததோடு, அஇபுதமமுக கட்சி நிர்வாகிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“கஜானா காலி!”… ‘தளபதி’யின் திட்டங்களால் அரசுக்கு பேராபத்தா?…மே 7-க்கு அப்புறம் கச்சேரி தெரியும்… நிதி நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…

26 minutes ago

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

40 minutes ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

40 minutes ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

47 minutes ago

“ஆட்சியை கலைப்பாரா ஆளுநர்?”… சட்டசபையில் மெஜாரிட்டி இல்லைனா என்ன நடக்கும்?… விஜய் அரசுக்கு வந்த சோதனை.. சட்ட வல்லுநர்கள் சொல்லும் ரகசியம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…

51 minutes ago

“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…

1 மணத்தியாலம் ago