மதுரையில் இன்று (அக்.30) செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம், புதிய கட்சி தொடங்கவுள்ளீர்களா? என்றும், உங்களின் ‘அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பதிலளித்த சசிகலா, “அதிமுகவில் Surprise-ஆக அனைத்தும் நடக்கும். அதிமுகவை ஆட்சிக்கு நான் கொண்டுவருவேன் என கூறுகிறேன்.
அதை பாருங்கள் என்றார். பின்னர் நீங்கள் “புதிய கட்சி தொடங்கவுள்ளீர்களா?” என்ற கேள்விக்கு, “நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
