“அன்று சசிகலா.. இன்று எ.வ.வேலு”…. திரைக்கு பின்னால் எ.வ.வேலு நடத்திய சீக்ரெட் டீலிங்?…. தவெக – திமுக மோதலுக்கு பின்னணி இதுதானா…?

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்படும் காரசாரமான மோதல்களைத் தணித்து, இருதரப்புக்கும் பாலம் அமைக்கும் மத்தியஸ்தராக எப்போதும் ஒரு தலைவர் உருவெடுப்பது வழக்கம். கடந்த காலத்தில் கருணாநிதி – ஜெயலலிதா இடையிலான கடும் அரசியல் மோதல்களின் போது, சசிகலா பின்னணியில் இருந்து உறவுப் பாலமாகச் செயல்பட்டதைப் போல, தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் எ.வ.வேலு அந்த இடத்தை வகிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

அண்மையில் தவெக – திமுக இடையே எழுந்த காரசாரமான விவாதங்களாகட்டும், அல்லது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரங்கேறிய அரசியல் நகர்வுகளாகட்டும், சூழலின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு எ.வ.வேலு சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, உதயநிதி – ஆதவ் அர்ஜுனா இடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் மரிய வில்சன் – ஜே.டி.ராஜேந்திரன் இடையிலான மோதல்கள் எழுந்தபோதும், இருதரப்பையும் நேரில் அழைத்துச் சமாதானம் செய்து காரியத்தைச் சாதித்ததில் இவரது ராஜதந்திர நகர்வுகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.