சிவகங்கையில் அஇபுதமுக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்த சசிகலா, தான் முதலமைச்சராக அமரவைத்துவிட்டுச் சென்ற எடப்பாடி பழனிசாமியிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டதாக உருக்கமாகப் பேசினார். தன்னை வி.கே.எஸ் (VKS) என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதாகவும், இதில் ‘வி’ என்பது வேலு நாச்சியாரையும், ‘கே’ என்பது குயிலியையும், ‘எஸ்’ என்பது சசிகலாவையும் குறிப்பதாக மக்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறையிலிருந்து மீண்டு வருவதே தமக்கு பெரும்பாடாக இருந்ததாகவும், அத்தருணங்களில் வேலு நாச்சியாரை நினைத்துத் தான் தைரியம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். கட்சியின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தான் சந்தித்த சோதனைகள் குறித்துப் பேசிய அவர், தான் தற்போது தமிழ்நாட்டு மக்களை மட்டுமே முழுமையாக நம்புவதாகவும், மக்கள் தனக்குத் துணை நிற்பார்கள் என்றும் அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
