நான் அரசியலுக்கு வந்தது ஏன் தெரியுமா..? உண்மையை உடைத்த சசிகலா… அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி..!!

By Soundarya on சித்திரை 12, 2026

Spread the love

தென்காசி சட்டமன்றத் தொகுதி அஇபுதமமுக வேட்பாளரை ஆதரித்து சுரண்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். தனக்குச் செய்த துரோகத்தை எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்குச் செய்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே தான் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார். காவல்துறையினர் தங்களது கடமையை நேர்மையாகச் செய்ய வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்துக் கவலை தெரிவித்த சசிகலா, மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்கும், சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படும் கனிம வளங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் தமது கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக கழுநீர்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.