அதிமுகவில் நாளுக்கு நாள் உள்கட்சிப் பூசல் தீவிரமடைந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி கட்சியைக் கைப்பற்ற வி.கே.சசிகலா புதிய அரசியல் வியூகம் வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. EPS மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் எஸ்பி வேலுமணியைப் பொதுச்செயலாளராகவும், சி.வி. சண்முகத்தை இணைப் பொதுச்செயலாளராகவும், நத்தம் விஸ்வநாதனைப் பொருளாளராகவும் நியமித்துத் தொண்டர்களின் ஆதரவைத் திரட்ட சசிகலா திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடித் திட்டத்தின் மூலம் கட்சியைத் தன் வசப்படுத்த முயலும் சசிகலாவின் நகர்வுகள், அதிமுகவின் சீனியர் தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சசிகலாவின் இந்த ரகசிய ‘ஸ்கெட்ச்’ குறித்து அறிந்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு எதிராகக் காய்களை நகர்த்தும் தலைவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக, உள்கட்சி விசுவாசத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம். இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதிமுக மீண்டும் ஒரு மிகப்பெரிய பிளவை நோக்கி நகருமா அல்லது இக்கட்டான இந்தச் சூழலை EPS எவ்வாறு கையாளப்போகிறார் என்பதே தமிழக அரசியலின் தற்போதைய முதன்மை கேள்வியாக மாறியுள்ளது.
