“சசிகலா, TTV தினகரனை திரும்ப சேர்க்கலனா”…. EPS-க்கு செக் வைத்த டாப் தலைவர்கள்…. கொதிக்கும் அதிமுக….!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தலைமையிலான நிர்வாகிகளுக்கு எதிராக மீண்டும் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைத்து ஒருங்கிணைந்த அமைப்பாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், உள்கட்சிப் பூசல் காரணமாக விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்த நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் தாய் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனர். இது, கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பையும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையதிகாரத்திற்கு புதிய சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.