சரோஜாதேவியின் கண்ணுக்குள் இருக்கும் கருப்பு புள்ளியின் பின்னணி.. அவரே சொன்ன தகவல்..

By Ranjith Kumar

Updated on:

60களில் எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படம் மூலம் அறிமுகமான சரோஜாதேவி அவர்கள், எங்க வீட்டுப் பிள்ளை, பாலும் பழமும், அன்பே வா போன்ற படங்களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து 60களில் பட்டைய கிளப்பி மிகப்பெரிய ஹீரோயினாக வலம் வந்தவர் இவர். இவர் அந்த சமயத்தில் டாப் 10 ஹீரோக்களுடன் நடித்து மிக பிஸியாக இருந்த ஹீரோயினில் ஒன்றானவர் இவர்.

   

அந்த கால இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்த சரோஜா தேவி அவர்கள் பல படங்களில் தன் நடிப்பின் திறமையை வெளிக்காட்டி பலகாலமாக திரைத்துறையினை கையில் வைத்திருந்தார். இவர் நீண்ட நாள் பிறகு கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்து பட்டைய கிளப்பிய படத்தில் இவர் நயன்தாராவின் அம்மாவாக மீண்டும் திரைத்துறையில் கால் எடுத்து வைத்து, பால் போன்ற முகத்தையும் தேன் போன்ற தன் குரலாலும் நடித்து அசத்தியிருப்பார்.

இவர் சில நாட்களுக்கு முன்னால் ஜெயா டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் தான் அனுபவங்களை பற்றி பேசி இன்டர்வியூ ஒன்று ரிலீஸானது,
அந்த இன்டர்வியூவில், நான் நடித்த வெற்றி பெற்ற மகாகவி பாரதிதாசன் என்ற படத்தில் ஷூட்டிங் ஷ்பாட்டில் நான் இருந்த பொழுது திடீரென துணை இயக்குனர் அவர்கள் என்னிடம் வந்து மேடம் உங்க கண்ணுல மச்சம் இருக்கு அதனால் பிரச்சனை வரும் அத ஆபரேஷன் பண்ணிட்டு தான் இந்த ஷூட்டிங் எடுக்க போறோம் என்று அவர் சொன்ன உடனே, நான் பயந்து ஓ என்று அழுதுட்டு எங்க அம்மா கிட்ட ஓடி போய் எனக்கு இந்த படம் ஒன்னும் வேண்டாம் நம்ம வாங்க ஊருக்கே போயிடலாம்னு சொன்ன அதுக்கு, எங்க அம்மா இரு என்ன பிரச்சனனு என்று கேட்போம் சொல்லி டைரக்டர் அவர்களை கூப்பிட்டு என்னு சொல்லி கேட்டதுக்கு,

துணை இயக்குனர் அவர் சும்மா விளையாடினார் ஆனால் சரோஜாதேவி கண்ணுக்கு கீழ் இருக்கும் மச்சம் தான் அவர் பின் மிகப்பெரிய அதிர்ஷ்டம், இப்படி மச்சம் இருக்கும் ஹீரோயின்கள் சீக்கிரமாகவே மிகவும் பிரபலமாகி விடுவார்கள், நிறைய படம் நடிப்பார்கள் இவங்களுக்கு அழகை அந்த மச்சம் தான் என்று அவர் பாராட்டினார். அதுக்கு நான் நம்பவே இல்லை, இவர் ஏதோ சும்மா விளையாடுறாரு அப்படின்னு பார்த்தேன், ஆனா நான் நடித்த மகாகவி பாரதிதாசன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, அப்படம் நேஷனல் அவார்டு வாங்கியது. இப்படத்தின் டைரக்டர் ஆன என் குரு சீதாராமன் சாஸ்திரி சொன்ன மாதிரியே நான் மிகப்பெரிய ஹீரோயினாக வலம் வந்தேன் என்று சரோஜாதேவி அந்த இன்டர்வியூவில் தன் மென்மையான குரலில் அந்தப் பழமை மாறாத குறும்புத்தனத்துடன் பேசிய வீடியோ இப்பொழுது வைரலாகி கொண்டு இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Jaya TV (@jayatvofficial)

author avatar
Ranjith Kumar