போதைப்பொருள் கடத்தல் வழக்கு… வசமாக விசாரணையில் சிக்கிய சரத்குமார் மகள் வரலட்சுமி?.. பகீர் கிளப்பும் பின்னணி…!!

By Nanthini

Updated on:

கேரளாவில் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு போதைப் பொருள்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சுமார் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இலங்கை தமிழர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14 வது நபராக ஆதி லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் அரசியல் மற்றும் சினிமா தொடர்பு அவருக்கு இருப்பது தெரியவந்தது.

   

இந்த வழக்கில் குணசேகரன் என்பவருக்கு ஆதி லிங்கம் பினாமியாக இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை அரசியல் மற்றும் சினிமா என பலவற்றில் முதலீடு செய்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகை வரலட்சுமி இடம் உதவியாளராக பணியாற்றியதாகவும் தெரிய வந்ததால் இந்த விசாரணை போல் நடிகை வரலட்சுமி கொண்டுவரப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் சம்மர் அனுப்பிய நிலையில் வெளி மாநிலத்தில் இருப்பதால் அவர் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் ஷூட்டிங் முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக அவர் கூறியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் தனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் தன்னிடம் வேலை பார்த்து ஆதிலிங்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்று விட்டார் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தாயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ள நிலையில் தான் வெளிமாநிலத்தில் இல்லை எனவும் சென்னையில் தான் இருக்கிறேன் எனவும் இந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வரலட்சுமி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

author avatar
Nanthini