Connect with us

நாளை வாக்கு எண்ணிக்கை.. மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி அங்கப் பிரதட்சணம் செய்த சரத்குமார்.. வைரலாகும் வீடியோ..!

CINEMA

நாளை வாக்கு எண்ணிக்கை.. மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி அங்கப் பிரதட்சணம் செய்த சரத்குமார்.. வைரலாகும் வீடியோ..!

விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டிருக்கும் நடிகை ராதிகா வெற்றி பெற வேண்டி அவரது கணவர் சரத்குமார் பராசக்தி அம்மன் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராதிகா.

80-களில் கொடி கட்டி பறந்த நடிகை ராதிகா ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். இவர் பிரபல நடிகரான சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது மனைவியாவார். இவரின் முதல் மனைவி சாயா.

   

 

இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் தான் வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார். இவருக்கு சமீபத்தில் பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூலை இரண்டாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை குடும்பமாக சேர்ந்து கவனித்து வருகிறார்கள்.

நடிகர் சரத்குமார் நடிகராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் கலக்கி வருகின்றார். சொந்தமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஒன்றை நடத்தி வருகின்றார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த சரத்குமார் தனது கட்சி சார்பாக அவரது மனைவி ராதிகாவை போட்டியிட வைத்தார்.

அதன்படி இந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தனது மனைவியும் பாஜக வேட்பாளருமான நடிகை ராதிகா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விருதுநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கும் பராக்சக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அங்க பிரதட்சணம் செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top