வந்தாச்சு சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை…. வழிபடுவதற்கு உகந்த நேரம், முறைகள் இதோ…

By admin on ஐப்பசி 9, 2024

Spread the love

இந்து மதத்தினர் அனைவருக்கும் இந்த நவராத்திரி தினம் மிக முக்கியமாகும். பெண் தெய்வங்களை வணங்கும் முறை தான் நவராத்திரி. இந்த நவராத்திரியின் முடிவில் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியை வணக்கும் விதமாக சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை விஜயதசமி ஆகியவை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை அக்டோபர் 11ஆம் தேதியும் விஜயதசமி அக்டோபர் 12ஆம் தேதியும் நிகழ்கிறது. பூஜை செய்வதற்கு உகந்த நேரம் மற்றும் முறைகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

கல்விக்கு உகந்த தெய்வம் சரஸ்வதி தேவி என்பதால் சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்கள் போன்றவற்றை வைத்து வணங்குவர். அன்றைய தினம் ஆயுத பூஜையாதால் தொழில் செய்வோர் தங்களது தொழில் செய்யும் இடங்களிலும் பொருட்களுக்கும் தங்களுக்கு சாப்பாடு போடும் அந்த தொழிலையும் வணங்கி பூஜை செய்வர். தொழிலுக்கு நம் வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை ஆகும்.

   

அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நாளில் மதியம் 12:15 முதல் 1:15 வரை நல்ல நேரம் உள்ளது. மாலை நேரத்தில் சாமி கும்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் 4:45 முதல் 5:45 வரை நல்ல நேரம் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகளின் புத்தகம் ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வழிபடலாம்.

 

பூஜையின் போது நெய்வேத்தியமாக சுண்டல், அவல்பொரி, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை வைத்து வழிபடலாம். இந்த நாளில் அம்பிகையை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் ஏற்பட்டு வாழ்க்கையில் வளர்ச்சி, மங்கள நிகழ்வுகள், ஆரோக்கியம், செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம். முக்கியமாக குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.