பிரபல நடிகரான விக்ரம் நடித்த தெய்வமகள் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் சாரா அர்ஜுன் விக்ரம் மகளாக நடித்திருந்தார். முன்னதாக சாரா அர்ஜுன் விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஏ.எல் விஜய் இயக்கிய தெய்வமகள் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

குழந்தை நட்சத்திரமாக அனைவர் மனதிலும் சாரா இடம் பிடித்தார். அதன்பிறகு ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தார்.

குழந்தையாக பார்த்த சாராவை இளம் பெண்ணாக பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போதே சாரா அர்ஜுன் ஹீரோயினாக சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் பேசி வந்தனர். இந்த நிலையில் சாரா அர்ஜுனுக்கு பாலிவுட்டில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த திரைப்படத்தில் சாராவுக்கு ஜோடியாக ரன்வீர் சிங் நடிக்கிறார். சாராவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் 20 வயது வித்தியாசம். இதனால் நெட்டிசன்கள் சாராவை கலாய்த்து வருகின்றனர். இவ்வளவு வயது வித்தியாசம் இருக்கும்போது சாரா அந்த படத்தில் நடிக்க வேண்டுமா என பேசி வருகின்றனர்.
