ஆதித்த கரிகாலனும் நந்தினியும் இணையும் புதிய படம்.. அடேங்கப்பா, இது நம்ம லிஸ்டிலேயே இல்லயே.. வெளியான அப்டேட்..

By Ranjith Kumar on மாசி 24, 2024

Spread the love

இந்தியாவில் புகழ்பெற்ற கவிஞரும் மான எழுத்தாளருமான “கல்கி” அவர்களின் படைப்பில் மிக சிறந்த படைப்பு “பொன்னியின் செல்வன்” நாவல் தான், இந்த நாவலை பலபேர் படமாக இயக்க நினைத்து முடியாமல் கைவிட்டு இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கமல்ஹாசன், ரஜினியின் காலம் வரை படத்தை இயக்க பலரும் நினை தோல்வியுற்று இருக்கிறார்கள், ஆனால் தற்போது கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இப்படத்தை இயக்கி இரண்டு பாகங்களாக வெளியிட்டு இந்திய சினிமா துறையை திரும்பிப் பார்க்க வைத்தார்.

இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்து சிறப்புமிக்க ராஜ ராஜ சோழனின் கதையை தூக்கி நிப்பாட்டுகிறார்கள் என்று கூறலாம், தற்போது பொன்னின் செல்வன் படத்தில் வரும் கரிகால சோழன், நந்தினி கதாபாத்திரத்தை நடித்த இருவரும் சேர்ந்து தற்போது புதிதாக ஒரு காதல் நாடகக் கதையில் நடிக்க உள்ளார்களாம்.

   

பொன்னியின் செல்வனில் விக்ரம் கரிகாலச் சோழனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி யாகம் நடித்திருப்பார்கள், இவர்களின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கரிகாலச் சோழனாக வந்த “சந்தோஷ்”, நந்தினி கதாபாத்திரத்தில் வந்த “சாரா அர்ஜூன்” இவர்கள் இருவரும் சேர்ந்து படம் நடிக்க உள்ளார்கள். இப்படத்தினை இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் துணை இயக்குனரான “சாணம் மரியன்” இயக்க உள்ளாராம்.

   

இவர் மணிரத்தினம் படமான பொன்னியின் செல்வன், செக்கச் சிவந்த வானம், போன்ற படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தை கூடிய விரைவில் இயக்க உள்ளதாக சான மரியம் தெரிவித்திருக்கிறார், சுந்தர் சி தயாரிப்பு கம்பெனி தான் இப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாம். இப்படத்தின் கதை முழுக்க முழுக்க “லவ் ரொமான்டிக் பேக் ட்ராப்” ஸ்டோரியாக கதைக்களம் அமைந்துள்ளதாம்.